மன்னாரில் துப்பாக்கி சூடு!- ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிசல் கிராமத்தில் நேற்று (மே 15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பெரிய கரிசல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சென்றிருந்த வேளையில் குறித்த நபர், படையினரை கூரிய ஆயுதத்தினால் தாக்க முயன்றுள்ளார்.

இதன்போபோதே பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share this Article