மன்னாரில் டிப்பர் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து மன்னார், நானாட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, காட்டுப்புதுக்குடியிருப்பில் நேற்று மாலை(செப்ரெம்பர் 20) நடந்துள்ளது.

நானாட்டான், ராசமடு சாளம்பனைச் சேர்ந்த ந.ஞானசேகரம் (வயது-55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகுின்றது.

உயிரிழந்தவரின் உடல் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article