மன்னாரில் இளைஞர் வெட்டிக்கொலை – நால்வர் பொலிஸாரால் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தில் நேற்றுக் காலை (ஜூன் 17) இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சங்குளம் கிராமத்தில் நேற்று நான்கு பேர் கொண்ட குழுவினர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தலைப்பகுதியில் சரமாரியாக தாக்கி கொலை செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் ஒருவர் நேற்று மாலை முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article