மண்ணின் மைந்தன் மேதகு ஆயா் இராயப்பு யோசப் அவா்கள் இயற்கை எய்தினாா்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் ஈழத் தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை 80 வயதில் இன்று காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
ஆயர் என்று பெயர் கண்டவுடன் இராயப்பு யோசப் ஆண்டகை பெயர் தான் தன்னாலே நினைவுக்கு வந்துவிடும்.
இறந்தாலும் தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன் நீங்கள் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது தன் ஓய்வு காலம் வரை தமிழ்த்தேசியத்திற்காய் குரல் கொடுத்தவர்.
அநியாயங்களுக்கு அக்கிரமங்களுக்கு எதிராகப்பேசிய குரல் ஓய்ந்து விட்டது என்பது மிகுந்த துயர். என் நெடுந்தீவன்னை ஈன்றெடுத்த ஆண்டகைக்கு என் ஆத்மார்த்த அஞ்சலி!
Share this Article