மக்கள் குறைகேள் செயற்பாடு இடம் பெறவுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் நெடுந்தீவு மக்களளது குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மக்கள் குறைகேள் செயலமர்வு எதிர்வரும் 28ம் திகதி (ஏப்ரல் 28) புதன் கிழமை காலை 10.00 மணிமுதல் மாலை 2.00 மணி வரை நெடுந்தீவு பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இடம் பெறவுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் நேரடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் நெடுந்தீவு பொதுஜன பெரமுன முன்னணியின் நெடுந்தீவு அமைப்பாளர் திரு.பற்றிக் றொஷான் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இவ் மக்கள் குறைகேள் செயற்பாட்டில் பொதுஜன முன்னணியின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் கலநது கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கொரோனா வைரஸ் தாக்க நிலமைகளைக் கருத்திற் கொண்டு மக்கள் அதற்கான பாதுகாப்பு வழிகளுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்;கள்.

Share this Article