போதைப்பொருள் பாவனைக்காக திருடியவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில்ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்கடந்த வாரம் குருநகர் பகுதியில் இரு வேறு இடங்களில் 90,000 ரூபாய்பணத்தையும், ஐந்தரைப் பவுன் பெறுமதியான நகையையும் திருடிச் சென்றவரேஇவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 23 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாண பிராந்தியகுற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையின் போது போதைப்பொருள் பாவனைக்காகவே தான்திருடியதாகச் சந்தேக நபர் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்ட பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில்முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Share this Article