போக்குவரத்து சேவை இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பயணத்தடை காரணமாக நெடுந்தீவில் நிறுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவை இன்று முதல் (28.06.2021) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி இன்மையினால் பேருந்து இறங்கு துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தரித்திருந்தது. ஆயினும் நேற்றைய தினம் சாரதி மற்றும் நடத்துனர்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மக்களது சேவையில் போக்குவரத்து சேவையில் இப் பேருந்து ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை இன்மையால் குறிப்பாக நெடுந்தீவு மேற்குப் பிரதேச பொது மக்கள் மிகவும் கடினப்படுகுகின்ற தன்மை காணப்படுகின்றது.

Share this Article