பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (ஜனவரி 10) மீட்கப்பட்டுள்ளது.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளத்தில் உள்ள வீதி வளைவுவொன்றுக்கு அருகில் இவரது சடலம் காணப்பட்டது. அவர் பயணித்தார் என்று நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

விபத்தின் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article