பேக்கரி உற்பத்திகளின் விலையை குறையுங்கள்- நுகர்வோர் உரிமையை பாதுகாக்கும் தேசிய இயக்கம் வலியுறுத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, எரிவாயு விலைகள் குறைக்கப்படும்போது பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் தமது வெதுப்பகங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்குகின்றன என்று கூறுகின்றனர்.

அதனால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அந்த சந்தர்ப்பங்களில் தெரிவித்தனர்.
தற்போது அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் சிற்றுண்டி சாலை உணவகங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும்.- என்றார்.

Share this Article