சிறப்பாக இடம்பெற்ற மருதமடு அன்னையின் நெடுந்தீவு பயணம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) காலை 9.45 மணிக்கு கடற்படை படகு மூலம் நெடுந்தீவு துறைமுகத்தை வந்தடைந்ததும் அலைகடல் என திரண்டிருந்த நெடுந்தீவு மக்கள் சிறப்பான வரவேற்பினை  துறைமுகப்பகுதியில் வழங்கியிருந்தனர்.

சிறப்பாக அமைக்கப்பட்ட திருச்சொரூப ஊர்தி மூலம் குதிரைகளின் அணிவகுப்புடன்  பிரதான வீதி ஊடாக பக்தர்கள் அணிவகுத்து செல்ல புனித யுவானியார் ஆலயம் நோக்கி சென்று யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் பி. ஜே. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி இடம்பெற்றதுடன் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெற்று மதியம் 1.45 மணியளவில் மருதமடு அன்னை நெடுந்தீவை விட்டு விடைபெற்று சென்றார்.

Share this Article