பெப்ரவரி 20ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. அதையடுத்து மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Share this Article