பூமணி அம்மா அறக்கட்டளையினரால் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு குடிநீர் வசதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பூமணி அம்மா அறக்கட்டளையினரால் அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கநாயகம் புனிதம் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் மு/மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 448 மாணவர்களுக்கும் 36 ஆசிரியர்களுமாக மொத்தம் 484 பேருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபரான இரத்தினசிங்கம் கோகுலன் அவர்கள், தங்கள் பாடசாலையின் குடிநீரானது 440 அளவு கல்சியம் செறிவை கொண்ட நீராகவும் கிருமி தொற்றுள்ள நீராகவும் காணப்படுவதாகவும் தங்கள் பாடசாலைக்கு சுத்தமான சுகாதார முறைப்படியான குடிநீரைப் பெறுவதற்கு கல்சியம் நீக்கி இயந்திரங்கள், மோட்டர்கள், தண்ணீர் தாங்கி வசதிகள் ஏற்படுத்தித் தரும்படி பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளிடம் விடுத்த கோரிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

Share this Article