‘புலிக்குளம்’ பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலர் கள விஜயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ‘புலிக்குளம்’ பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலர் திரு.அ.உமாமகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் கடந்த 28 ஆம் திகதி கள விஜயத்தினை மேற்கொண்டனர்.

குளத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் தற்போது பயன்பாடற்று இருக்கும் இக் குளத்தினை எதிர்காலத்தில் அபிவிருத்தி நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கிலும் இந்த கள விஜயம் அமைந்தது.

இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜெயபவாணி, துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமீரா, விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article