புயல் எச்சரிக்கை கொடிக்கம்பம் திறப்பு விழா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச கட்டிடத்தில் புயல்காற்று சுறாவளி போன்ற கடற்தொழிலாளர்களை பாதிக்கும் நிலமைகள் ஏற்படும் போது அது தொடர்பான முன்னெச்சரிக்கை செயற்பாட்டினை ஏற்படுத்தும் முகமாகவும் அதனை மக்களுக்கு தெளிவு படுத்தும் முன்னுதாரண செயற்பாடக சமாசக்கட்டிடத்தின் முன்பாக எச்சரிக்கை கொடி ஏற்றுவதற்கான கொடிக்கம்பம் தயார் செய்யப்பட்டு நாளைய தினம் (ஜீலை 19) காலை 10.00 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு.பா.லீலியான் குருஸ் அவர்களது வேண்டுகோளினை ஏற்று லண்டனில் வசிக்கும் நெடுந்தீவினை சேர்ந்த திரு.யோன்சன் அவர்களால் இதற்கான நிதி அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article