புத்தாண்டை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் கோட்டா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 4) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல தேவையான எரிபொருள் இருப்புகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு 5 லீற்றரில் இருந்து 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றரில் இருந்து 7 லீற்றராகவும், பேருந்துகளுக்கு 40 லீற்றரில் இருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், லொரிகளுக்கு 50 லீற்றரில் இருந்து 75 லீற்றராகவும், சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், வேன்களுக்கு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், land vehicles 15 லீற்றரில் இருந்து 25 லீற்றராகவும், quadric cycle 4 லீற்றரில் இருந்து 6 லீற்றராகவும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share this Article