புதையல் தேடும் ஸ்கானருடன் வடக்கில் இளைஞர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, செட்டிக்குளத்தில் புதையல் தோண்டப் பயன்படுத்தப்படும் ஸ்கானருடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிக்குளத்தில் விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரே இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அவரிடம் இருந்து புதையல் தேடும் ஸ்கானர் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என்றும் அவர் மேலதிக நடவடிக்கைக்காக செட்டிக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share this Article