புதுக்குடியிருப்பில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் கண்காட்சியும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மகளீர் அபிவிருத்தி நிலைய மனைப் பொருளியல் டிப்ளோமா தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பிரதேச மட்ட கண்காட்சியும் நேற்று (பெப்ரவரி 21) மூங்கிலாறு வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந், சிறப்பு விருந்தினர்களாக உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கௌரவ விருந்தினராக மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கண்காட்சி மண்டபம் திறந்து வைக்கப்பட்டதுடன், டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Share this Article