புதுக்குடியிருப்பில் இ.போ.ச பேருந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்று (ஒக்ரோபர் 14) மாலை 5.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இச் சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Share this Article