புதுக்குடியிருப்பில் அறநெறி பாடசாலைகளுக்கு புத்தகங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான புத்தகங்கள் நேற்று(ஜூன் 24) கையளிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்துசமய கலாச்சாத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 25 அறநெறி பாடசாலைகளுக்கான புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், அறநெறி ஆசிரியர்களுக்கான சேலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share this Article