பிஸ்கட் விலையை குறைத்த முன்னணி உற்பத்தி நிறுவனங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று முதல் சந்தைகளில் பிஸ்கட் விலையை குறைக்க அதன் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 8 முதல் 15 சதவீதத்தால் பிஸ்கட் விலை குறைவடையவுள்ளது.

இதற்கமைய, புதிய விலை அடங்கிய பிஸ்கட் இன்று முதல் சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாக நாட்டின் முன்னணி பிஸ்கட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

டொலர் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் முன்னணி பிஸ்கட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article