பிரதான வீதி திருத்தம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதான வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமையினால் பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கடந்த காலங்களிலும் பல இடங்களில் பேசப்பட்டு வந்தது

தற்போது பிரதான வீதியில் முதற்க கட்டமாக 3.65 கிலோ மீற்றர் தூரத்தினை திருத்தம் செய்வதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர் கட்டிட நிறுவனத்தினர் வீதி திருத்தத்திற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அதற்கான பொருட்கள் நெடுந்தீவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளது.

பிரதான வீதியின் மிகுதியாகவுள்ள பகுதியினையும் உடன் திருத்தம் செய்ய வேண்டிய தேவையினை உணர்ந்து இது தொடர்பாக இன்றைய தினம் (ஜீன் 23) வன ஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சரின் இணைப்பு செயலாளரும் பொதுஜன பெரமுன அமைப்பின் தீவக இணைப்பாளருமான மா.பரமேஸ்வரன் மற்றும் பொதுஜன பெரமுனயின ;யாழ் மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ் ஆகியோர் மிகுதியான வீதியனையும் திருத்தம் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இவர்களது வேண்டுகோளினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மிக விரைவாக அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்குவதாக உறுதி மொழி வழங்கியுள்ளதாக எமது இணையத்தளத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான வீதிகளும் திருத்தப்படவேண்டும் என்பதே நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்hக காணப்படுகின்றது வீதி திருத்தப்படுகின்ற போது தான் ஏனைய அபிவிருத்திகளும் இலகுவாக இடம் பெறும்

Share this Article