பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்தது.

இது தொடர்பில் அரசாங்க அச்சகத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி திருமதி கங்காணி லியனகே, 300 வகையான பாடப்புத்தகங்கள் தற்போது அச்சிடப்படுகின்றன என்று தெரிவித்தார்.

எதிர்வரும் பாடசாலைத் தவணையில் இந்தப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this Article