பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் தீர்மானம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதை அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சால் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகின்றேன் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இல்லையெனில், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி ஏற்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share this Article