பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் கல்வி கற்கும் 100 மாணவா்களுக்க நேற்றைய (பெப்ரவாி 02) தினம் புத்தகப்பைகள், தமிழ் அகராதி புத்தங்கள், மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நெடுந்தீவு சமுா்த்தி வங்கிக் கிளையின் முன்னாள் வங்கி முகாமையாளா் திரு.சின்னத்தம்பி சிறிதரன் அவா்களின் ஒழுங்கமைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் அனுசரணையில் இப் பொருட்கள் இரண்டாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போா் கூடத்தில் நெடுந்தீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவா்கள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், பாடசாலை அதிபர்கள்,நெடுந்தீவு சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர், பிரதேச செயலக அலுவலர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

Share this Article