பாடசாலையில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு- டெல்ப்ட் சமுத்திரா ஹோட்டல் நிறுவனம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே  பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் டெப்ல்ட் சமுத்திரா ஹோட்டல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிளாஸ்ரிக் கழிவுகள் சேகரிப்பு கொள்கலன் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிப்பாளரூடாக நிறுவன முகாமையாளர் அ. சேரன், நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபரிடம் கையளித்து வைபவ  ரீதியாக  அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிறுவனத்தினரால் ஏற்கெனவே மாவிலித் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில்  பிளாஸ்ரிக் கழிவுகள் சேகரிப்பு கொள்கலன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article