பளையில் நடந்த கோர விபத்து – ஒருவர் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் யாழ்.நோக்கி விற்பனை பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறிய கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மறுபக்கத்திலிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான வாகன சாரதி பளை வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article