பல்கலைக்கழகத்தில் பகிடிவதை!- 11 மாணவர்கள் இடைநீக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களைப் பகிடிவதை செய்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கூற்றுப்படி, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் புதிய மாணவர்களைப் பல்கலைக்கழக விடுதியில் ஐந்து நாட்கள் தங்கவைத்து, நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை அவர்களுக்கு வழங்கியுள்ளதுடன், மேலும் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article