பயனிகள் படகு பழுதடைந்தது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இன்று (ஜீலை 09) மாலை குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திரா தேவா படகு இடை நடுவில் பழுதடைந்த போதும் திருத்தம் செய்யப்பட்டு பயனிகளுடன் பக்குவமாய் கரை வந்து சோந்தது.

நயினாதீவு கடந்து வருகின்ற போது படகின் இயந்திர கோளாறு காரணமாக அடிக்கடி இயந்திரம் இயங்க மறுத்த போதும், துரிதமாக செயற்பட்டு திருத்தம் செய்யப்பட்டு நெடுந்தீவு பாலத்தினை வந்தடைந்தது.

படகு வருவது தாமதமாவதை அவதானித்து ஹரிகரன் படகு உடனடியாக உதவிக்கு விரைந்து சென்றது. ஆயினும் படகு திருத்தம் செய்யப்பட்டு சமுத்திர தேவா படகு நெடுந்தீவு துறைமுகத்தினை வந்தடைந்தது. மாலை 04.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகு மாலை 06.10 மணிக்கு கரை வந்து சேர்ந்தது.

Share this Article