பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம்! -மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (ஏப்ரல் 20) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட து.

இதன்போது வடக்கு கிழக்கு பெண்கள்  கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து குறித்த  கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி குறித்த பெண்கள் அமைப்பினரால் கவன ஈர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வு குறித்த நேரத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டது. மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்பு  நிகழ்வில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்தக் கோரி குறித்த பெண்கள் அமைப்பினரால் அறிக்கை ஒன்றும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Share this Article