“நெய்தல்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நெடுந்தீவில்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தனும், புலம்பெயர்ந்து கனடா வசிக்கும் ஆறுமுகம் குகன் அவர்களின் “நெய்தல்” சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25 பெப்ரவரி) மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு நெடுந்தீவு மகாவித்தியாலய ஓய்வுநிலை அதிபர் திருமதி சாரதாதேவி கிருஸ்ணதாஸ் தலைமையில் இடம்பெற உள்ளதுடன், நூலுக்கான மதிப்பீட்டு உரையினை ஓய்வுநிலை அதிபர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் மற்றும் சமூக சேவையாளர் தனலட்சுமி மருதலிங்கம் ஆகியோர் மேற்கொள்வதுடன் நிகழ்ச்சிகளை வி. சபேசன் தொகுத்து வழங்கவுள்ளார்.

ஆர்வலர்களை இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு நூலாசிரியர் அழைத்துநிற்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article