நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் நேற்றையதினம் (ஆகஸ்ட் 04 ) ஆரம்பமாகிய “நெடுவூர்த்திருவிழா” இரண்டாம் நாள் விளையாட்டு நிகழ்வுகளின் அடிப்படையில் மென்பந்து துடுப்பாட்டப் போட்டி நெடுந்தீவு ஸ்ரார் விளையாட்டு கழக மைதானத்தில் இன்றையதினம் (ஆகஸ்ட் 05) சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
நெடுவூர்த்திருவிழா 2024 மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் நெடுந்தீவு புறாக்கூடு மற்றும் நெடுந்தீவு குதிரைகள் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதன்போது நெடுந்தீவு குதிரைகள் அணி 12 ஒட்டங்களால் வெற்றிபெற்று கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.
இப்போட்டித் தொடரில் 06 அணிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.