நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலய மாணவர்களின் மாதிரி சந்தை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

இன்றையதினம் (நவம்பர் 07) வித்தியாலய அதிபர் ப.பத்மகாந்தன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் கு. நிசாந் கலந்துகொண்டதுடன் சந்தை நிகழ்வையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்


நிகழ்வில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை , மாணவர்கள் விற்பனைக்கு வைத்திருந்தமை சிறப்பாகும் இதன்போது ஆசிரியர்கள், பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.