நெடுந்தீவில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சிமுறை மின்சார விநியோகத்தினால் வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது (மே10- மாலை 4.00) மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள வேளையில் ஆஸ்த்துமா நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்தபோதும் மின்தடை காரணமாக அவருக்கான உடனடி சிகிச்சையினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுக்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல நேற்று இரவும் காயம் காரணமாக வந்த ஒருவருக்கு ரோர்ச்லைற் வெளிச்சத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இதேவேளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்தவென வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட மின் இயந்திரம் நீண்டகாலமாக பழுதடைந்த போதும் அதற்கு பதிலாக புதிய இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உரிய அதிகாரிகள் தெரிவித்தபோதும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போதைய சுழற்சிமுறை விநியோகத்தில் வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு தொடர் மின்சார வசதி கிடைக்கும் வகையில் உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வைத்தியசாலையினர் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.