நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் முச்சக்கர வண்டி மோதியதில் பலியாகிய குடும்பஸ்த்தரின் உடல், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இன்று (ஜூன்16) மாலை குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பர்ணாந்து  சகாயதேவதாஸ் (குமார் – வயது 59) என்பவரே நேற்றையதினம் (ஜூன்15) இரவு நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே  வேகமாக வந்த முச்சக்கரவண்டி  மோதி உயிரிழந்தவரார்.

அவரது உடல் இன்று மதியம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக  யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவரது இறுதி நல்லடக்க ஆராதனை நாளையதினம் (ஜூன்17) நெடுந்தீவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு பொலிஸாரால் இன்று (ஜூன்16) காலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் அவரை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை சுட்டிக்காட்த்தக்கதாகும்.

Share this Article