மகிழ்சிகரமான கற்றல் செயற்பாட்டில் வீட்டுச்சூழலை அமைக்கும்செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரி தரம் ஒன்று மாணவர்களால் இன்று (பெப். 11) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
தரம் ஒன்றுக்கான கல்வியை குறித்த கல்லூரியில் ஆரம்பித்த மாணவர்களினால்ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரி முதல்வர்அருட்சகோதரி மரினா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அதிதிகளை சம்பிரதாய முறையில் வரவேற்ற சிறார்கள் தாம் வாழும்வீட்டுச்சூழலில் மேற்கொள்ளும் அன்றாட செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆற்றுகைப்படுத்தியிருந்தனர்.
கடத்த இரு வாரங்களாக குறித்த செயற்பாட்டை கல்லூரி சமுகத்தின் சிறப்பான ஒழுங்குபடுத்தலில் முன்னெடுத்திருந்த மாணவர்களின் இவ் இறுதி நிகழ்வில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்திருந்தனர்.