நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நாளை மறுதினம் (பெப். 06) வியாழக்கிழமை பி. ப. 2.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மெரினா சகாயம் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் அபிவிருத்திக்கான பிரதி பணிப்பாளர் செல்லையா இளங்கோ அவர்கள் கலந்து சிறப்பிப்பதுடன் சிறப்பு விருந்தினராக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளாரும் கௌரவ விருந்தினர்களாக மகா வித்தியாலய ஆசிரியர் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், தீவக கல்வி வலய ஆரம்ப கல்வி உதவி பணிப்பாளர் லோ.ஸ்ரனிஸ்லஸ், தீவக கல்வி வலய கிறீஸ்தவ பாட கல்வி ஆலோசகர் டோ.யூட்ஸ்கிங் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கல்லூரி சமூகம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.