நெடுந்தீவுக்கான மின் விநியோகம் கடந்த 28/11 முதல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவின் மின்சார நிலையத்தினுள் வெள்ளம் புகுந்துள்ளமையால் இயந்திரத்தினை இயக்கமுடியாத நிலை உள்ளது
எனவே கடற்படையினரின் ஒத்துழைப்புடன் நீரை வெளியேற்றும் முயற்சி நேற்று (29/11) முன்னெடுக்கப்பட்ட போதும் அதுபலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
இன்று (30/11) மீளவும் நீரை வெளியேற்றும் வேலையினை கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன