நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பழைய மாணவர்களுக்கு இடையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் வயதுஅடிப்படையில் இம் மாதம் ஒக்.25 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ் விளையாட்டு நிகழ்வுகளில் பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்துவவிண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அங்கத்தவர்களாக இணைந்துஅங்கத்துவ இலக்கத்தினை பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமேஇப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளாதவர்கள் தினமும் மாலை 03.30 மணி முதல் மாலை 05.30 மணிவரைபாடசாலையில் நேரடியாக விண்ணப்ப படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்துவழங்க முடியும் என பழைய மாணவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.