நெடுந்தீவு மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 80வது ஆண்டு நிறைவுதினத்தினை முன்னிட்டு பழைய மாணவர்கள் மத்தியில் வயது அடிப்படையில்விளையாட்டு நிகழ்வினை நடாத்துவதற்கு பழைய மாணவர் சங்கம்தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி வயது அடிப்படையாககொண்ட 04 பிரிவுகளாக இப் போட்டி இடம் பெறும்
குழு 01 – 30வயதிற்குட்பட்டோர்.
குழு 02 – 31 வயது முதல் 40வயது வரை
குழு 03 – 41 வயது முதல் 50 வயது வரை
குழு 04 – 50 வயதிற்கு மேற்பட்டோர்.
கரப்பந்தாட்டம் – ஆண்கள்
குழு 01 – 35 வயதிற்குட்பட்டோருக்கான செற் அப் முறையிலான போட்டி
குழு 02 – 35 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஓவர் கேம்
உதைபந்தாட்டம் – ஆண்கள்
குழு 01 – 35 வயதிற்குட்பட்டோர்
குழு 02 – 35 வயதிற்கு மேற்பட்டோர்.
கிளித்தட்டு – பெண்கள் – திறந்த போட்டி
இப்போட்டிகள் யாவும் எமது வித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள்மத்தியில் இடம் பெறவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தில் அங்கத்தவர்களாகஇணைந்து கொண்டவர்கள் மாத்திரமே போட்டியில் பங்கு கொள்ள முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இதுவரை பழைய மாணவர் சங்கத்தில் விண்ணப்பப் படிவங்களைபூர்த்தி செய்து அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளாதவர்கள் உடனடியாகஇணைந்து கொள்ளுமாறு வேண்டபட்டுள்ளது. அத்துடன் இம் மாத இறுதிக்குள்போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் உடனடியாக அனைவரும் பழைய மாணவர்சங்கத்தில் இணைந்து கொண்டு அங்கத்தவர் இலக்கங்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது.
நன்றி மேலதிக தகவலுக்கு
திரு.ஐ.தயாபரன் 94774269166 வித்தியாலய முதல்வர், தலைவர், பழையமாணவர் சங்கம்
திரு.கு.ஜனேந்திரன் – 94770251033 செயலாளர், பழைய மாணவர் சங்கம்
திரு.ப.லீலியான் குரூஸ் – 94772105355 தலைவர், 80வது ஆண்டுநினைவுதின விளையாட்டு குழு
திரு.கு.ஜனேந்திரன்
செயலாளர்
பழைய மாணவர் சங்கம்