நெடுந்தீவு மகா வித்தியாலய மணவர்களது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் “வெண்பலகைகள்” (White board) இன்றையதினம் (செப். 17) கையளிக்கப்ட்டுள்ளது.

முன்னாள் அதிபர் அமரர் நவரட்ணசிங்கம் அவர்களது காலத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவர் தனது புலம்பெயர் தேச பேரப்பிள்ளையின் நிதியுதவியுடன் கொள்வனவு செய்யப்பட்ட வெண்பலகைகளை வைபவ ரீதியாக பாடசாலை சமூகத்திடம் கையளித்திருந்தார்.

சகல வகுப்பறைகளுக்கும் பொருத்தும் வகையில் 10 வெண்பலகைகள் வித்தியாலய பழைய மாணவர் சங்கமூடாக ரூபா. 1 இலட்சம் பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் வகுப்பறைகளில் பொருத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவர் சங்க செயலாளர் கு.ஜனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நன்கொடையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.