நெடுந்தீவு மகா வித்தியாலய 80வது ஆண்டு மலருக்கான ஆக்கங்கள் கோரல் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு விழா அமுதமலர் வெளியீடுசெய்வதற்கான ஆக்கங்கள் மலர்க்குழுவினால் கோரப்பட்டுள்ளது.

இதற்கான ஆக்கங்கள் பெற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி இம் மாதம் 30ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மலர்க் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மலருக்கான ஆக்கங்கள் தொடர்பில் மலர்க்குழுவால் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்…..

நெடுந்தீவு மகாவித்தியாலயம் சார்ந்ததாகவும் நெடுந்தீவினை பற்றியதுமானஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்கள்வரவேற்கப்படுகின்றன.

ஆக்கங்கள் யாவும் தங்களது சுய முயற்சியினால் எழுதுப்பட்டதாக அமைதல்வேண்டும்

இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் ஆக்கங்களைஅனுப்பி வைக்க முடியும்.

ஆக்கங்கள் யாவும் அதிபர் யா.நெடுந்தீவு மகாவித்தியாலயம் எனும் முகவரிக்குபதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். இடது பக்க மேல்மூலையில் 80வது ஆண்டு நூலிற்கான ஆக்கம் எனக் குறிப்பிடுதல் நன்று

ஆக்கங்கள் யாவும் செப்ரம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக (2025.09.30) கிடைக்க கூடியவாறு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

கிடைக்கப்பெறும் ஆக்கங்கள் யாவும் நூல் வெளியீட்டுக் குழுவினால் ஆய்வுசெய்யப்பட்டு தரமானதாக கருதப்படும் ஆக்கங்களே தேர்வு செய்யப்படும்.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள

திரு.செ.மகேஸ் – 94774687873 தலைவர் 80வது ஆண்டு நூல் வெளியீட்டுக்குழு

திரு.ஜ.தயாபரன் – 94774269166 பாடசாலை முதல்வர் தலைவர் பழையமாணவர் சங்கம்

திரு.கு.ஜனேந்திரன் – 94770251033 செயலாளர் பழைய மாணவர் சங்கம்

Share this Article