நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழா நாளை மறுதினம் (ஜூலை03) புதன்கிழமை பகல் 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 தினங்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.
ஜூலை மாதம் 10 ஆம் திகதி புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும் மறுநாள் (ஜூலை11) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு தேர் திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவமும், கொடி இறக்கமும் இடம்பெறும்.