நெடுந்தீவில் கடந்த இரண்டு வருடங்களாக பதில் பிரதேசசெயலராக மற்றும் பிரதேசசெயலராக பணியாற்றி வடபிராந்திய பிரதி தாபால்மா அதிபராகபதவியுயர்வுபெற்று செல்லும் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களது சேவையினை பாராட்டி வாழ்த்தும் நிகழ்வு (ஓகஸ்ட் 29) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சார்பில் இந்நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்று பிரதேச செயலாளரை வழியனுப்பும் வகையில் சிறப்பாக இடம்பெற்றது.


இதன்பேது பிரதேச செயலருக்கான நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் செயலக உத்தியோகத்தர்கள் சார்பாகவும் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சார்பாகவும் சேவைநலன் பாராட்டு மடல்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
