நெடுந்தீவு பிரதேச செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் எப். சி. சத்தியசோதி (2018.05.02 – 2024.04.19)

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்திவு பிரதேச செயலாளராக 2018 மே 02 தொடக்கம் இன்றுவரை (ஏப்ரல19) சிறப்பான பணியாற்றி வந்த      திரு. எப். சி. சத்தியசோதி அவர்கள்இன்றைய தினத்துடன் நெடுந்தீவு பிரதேச செயலர் பதவியில் இருந்துவிடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசெயலாளர் ஆகிய பதவிகளை வகித்து வந்த நிலையில் இன்றுடன் நெடுந்தீவு பிரதேசசெயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ் மாவட்ட சமுர்த்திபணிப்பாளர் கடமையினை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நவம்பர் தொடக்கம்  உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்த திருமதி. நிவேதிகா கேதீசன் அவர்கள் இன்றைய தினம் முதல் நெடுந்தீவுக்கான பதில் பிரதேச செயலாளராக சம்பிரதாய பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த சுமார் ஆறு வருட கலமாக நெடுந்திவு பிரதேச செயலாளராக பணியாற்றி வந்த எப். சி. சத்தியசோதிஅவர்கள் நெருக்கடியான கொரோணா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதுடன் தனது நெடுந்தீவு சேவைக்காலத்தில் மக்களின் அன்றாட தேவைகளை அறிந்து  தம்மாலான பணிகளை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article