நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் வாணிவிழா 2025 சிறப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் வாணிவிழா 2025 நிகழ்வுகள் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவி திருமதி த.திரேஸ் நேரூஜினி அவர்களின் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஒக்.01 அன்று சிறப்பாக இடம்பெற்றது.

நவராத்திரி இறுதி நாள் பூசைகளை தொடர்ந்து இடம்பெற்ற விழாவின் பிரதம அதிதியாக நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு என். பிரபாகரன் அவர்கள் கலந்துசிறப்பித்திருந்தார்.

இதன்போது, நவராத்திரி விழாவை முன்னிட்டு நெடுந்தீவு கல்விக் கோட்டத்தின்பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கோலம் போடுதல், தோரணம்கட்டுதல், மாலை கட்டுதல், பண்ணிசைத்தல் மற்றும் நிறைகுடம் அமைத்தல்ஆகிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசல்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் சிறப்புற இடம்பெற்ற வாணி விழா நிகழ்வில் நெடுந்தீவுமகாவித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அ.த.க. வித்தியாலய  மாணவிகளின் நடனங்கள் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article