நெடுந்தீவு பங்கைச் சேர்ந்த அருட்தந்தை சகாயதாசன் விமல்ராஜ் புதியகுருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பங்கின் மரியன்னை ஆலயத்தை சேர்ந்த அருட்தந்தை சகாயதாசன்விமல்ராஜ் அவர்கள் புதிய குருவாக இன்றையதினம் திருநிலைப்படுத்தப்பட்டார்.

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கானதிருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி இன்றையதினம் (மே03) திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல்அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில்அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டரான சகாயதாசன் விமல்ராஜ்  அவர்கள் புதிய குருவாக  திருநிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article