நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் வைத்து இன்றையதினம் (ஜூலை17) மாலைநெடுந்தாரகையில் வந்த பயணிகளை நெடுந்தீவு பொலிசார் திடீர் சோதனைக்கு உட்படுத்தியமையால் பயணிகள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு நெடுந்தாரகையில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்களோ , கைதுகளோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டின் தென்பகுதியில் அடிக்கடி இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் சகல பகுதிகளிலும் இவ்வாறான திடீர் பரிசோதனைகள் இன்றையதினம் இடம்பெற்ற நிலையிலேயே நெடுந்தீவிலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.