நெடுந்தீவு திருலிங்கபுரம் மக்களுடன் “நெடுவூர்த் திருவிழா” கலந்துரையாடல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகளைஒன்றிணைத்து  04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை

“நெடுவூர்த் திருவிழா” நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்திருலிங்கபுரம் இறையிரக்க ஆண்டவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தகலந்துரையாடலில் திருலிங்கபுரம் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் ஆவணி மாதம் இடம்பெறவிருக்கும் நெடுவூர்த்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த திருவிழாவை சிறப்பாக நடாத்திமுடிப்பது தொடர்பாகவும் இதில் திருலிங்கபுரம் வாழ் உறவுகளின் பங்களிப்புதொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Share this Article