“நெடுந்தீவு சுகாதார விழா” – செப். 12 நெடுந்தீவில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (செப்.12) “நெடுந்தீவு சுகாதார விழா” இடம்பெறவுள்ளது.

சுகாதார விழாவின் போது நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான

பொது மருத்துவ முகாம்,

சித்த மருத்துவ சேவை,

தொற்றா நோய்களுக்கான பரிசோதனை,

கண் பரிசோதனை

என்பன குறித்த தினத்தில் (செப்.12) இடம்பெற ஏற்பாடாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் முதியோர் பகற்பராமரிப்பு நிலையத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் அன்றையதினம் (செப். 12)

போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சி

சுகாதார கல்வி தொடர்பான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

“நெடுந்தீவு சுகாதார விழா” தொடர்பாக இடம்பெறவுள்ள விளையாட்டு நிகழ்வுகளின் இறுதி போட்டி நிகழ்வுகள் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெறவும் ஏற்பாடாகியுள்ளதுடன் , மாலை 6.00 மணிக்கு நெடுந்தீவு தேவா கலாச்சார மண்டபத்தில் கலாசரசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

விழா தொடர்பான ஏற்பாடுகளை  மேற்கொள்ளும் வகையில்  யாழ் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஏற்பாட்டுக் குழுவினர் இன்றையதினமே (செப். 09)நெடுந்தீவுக்கு வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article