நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையே 150 பயணிகள் பயணிக்கும் புதிய படகு சேவை – அமைச்சரவை அனுமதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையே 150 பயணிகள் பயணிக்கும் புதிய படகு சேவை ஒன்றை ஆரம்பிக்க ஏதுவாக சமூக சக்தித் திட்டத்தின் கீழ் 250 மில்லியன் பெறுமதியில் புதிய படகை சீனோர் நிறுவனமூடாகத் தயாரித்து வழங்க கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த திட்டத்தின் கீழ் பெறப்படும் படகின் இலாபம் நெடுந்தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படும் என தெரிவிக்கப்படுகின்றது

யாழ்ப்பாணத்தின் வெளித் தீவுகளான நெடுந்தீவு போன்ற பகுதிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய படகு வசதிகள் போதுமானதாக இல்லாததால் மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வாகப் புதிய படகுச் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நெடுந்தீவு அபிவிருத்திக் குழு ஊடாகப் படகு இயக்கப்பட்டு, அதில் ஈட்டப்படும் இலாபம் நெடுந்தீவிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்தப்படும் எனக் தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article
Leave a comment